புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (17:17 IST)

மீனம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)

பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும்.  எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
 
தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து  உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.  அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.
 
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு  பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.
 
பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில்  வெற்றி கிடைக்கும். 
 
கலைத்துறையினருக்கு கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை  தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
 
 
அரசியல் துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத  பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. 
 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
 
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி: 24, 25
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்: 3, 4.